மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி!

கற்பூரவள்ளி உயர்வான நறுமணம் மிக்க மூலிகை .இது அதிகளவு ஆரோக்கிய நன்மையளிக்கும் மூலிகை ஆகும் .

மருத்துவ சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தும் இவை இருமல் மற்றும் சளியை குணப்படுத்துவதில் உதவுகிறது. ஆயுர்வேதத்திலும் இவை பயன்படுத்தப்படுகிறது.

100 கிராம் கற்பூரவள்ளியில்,
4.3 கிராம் கொழுப்பு,
25 மிகி சோடியம்,
1,260 மிகி பொட்டாசியம்,
வைட்டமின் ஏ (34%),
கால்சியம்(159%),
வைட்டமின் சி (3%),§ இரும்புச்சத்து (204%),
வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%)
69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.அவையாவன கற்பூரவல்லியின் சத்துக்களாகும் .

கற்பூரவள்ளி நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலையும் , தண்டும், பயன்தரக்கூடியவை.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் பெரியவர்கள் கற்பூரவள்ளி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடலாம். கற்கண்டு சேர்த்தும் இலையை மென்று சாப்பிடலாம்.மூட்டுவலிக்கு கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.

வயதானவர்கள் ஒரு வாரம் இதை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.


கற்பூரவள்ளி கை- கால் வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாகவே வழங்கப்படுகிறது. தேள் கடித்தவுடன் அவசர நிலைக்கு கற்பூரவள்ளி சாற்றை மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.

தாய்ப்பாலூட்டும் பெண்கள் கற்பூரவள்ளி இலைச்சாற்றை குடித்தால் குழந்தைக்கு அதன் நன்மைகள் கிடைக்கும்.மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கற்பூரவள்ளி இலைகளை வீட்டில் பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாமல் இருக்கும்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை