பாகற்காயின் மருத்துவப் பயன்கள்!

101

நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது.

கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் குடற்புழுக்களை அகற்றும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: