• Apr 23 2024

பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி சத்தமிட்ட உறுப்பினர்கள்: அதிகரித்து வரும் எதிர்ப்பு! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 7:13 pm
image

Advertisement

பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.மக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமலே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் பிரான்ஸ் பிரதமரான , Élisabeth Borne.ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் ஊளையிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அத்துடன், ஓய்வு பெறு வயதை 64ஆக்க விடமாட்டோம் என்று கூறும் பதாகைகளை ஏந்தியவண்ணம் நின்றார்கள் .

பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும், பிரதமரை சபாநாயகர் பேச அழைக்க, அவரைப் பேசவிடாமல் ஊளையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்னர் தேசிய கீதத்தைப் பாடத்துவங்கினர்.சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி சத்தமிட்ட உறுப்பினர்கள்: அதிகரித்து வரும் எதிர்ப்பு SamugamMedia பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.மக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமலே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் பிரான்ஸ் பிரதமரான , Élisabeth Borne.ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் ஊளையிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அத்துடன், ஓய்வு பெறு வயதை 64ஆக்க விடமாட்டோம் என்று கூறும் பதாகைகளை ஏந்தியவண்ணம் நின்றார்கள் .பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும், பிரதமரை சபாநாயகர் பேச அழைக்க, அவரைப் பேசவிடாமல் ஊளையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்னர் தேசிய கீதத்தைப் பாடத்துவங்கினர்.சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement