• Sep 28 2024

என்னையும் மகளையும் கருணைக் கொலை செய்யுங்கள்- கண்ணீர் விட்ட தந்தை!samugammedia

Sharmi / Apr 14th 2023, 12:37 pm
image

Advertisement

குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் மகளின் கால் பாதிக்கப்பட்டதாக மனம் வருந்திய தந்தை தன்னையும், மகளையும் கருணைக் கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும்  கோதண்டபாணி என்பவர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான அளிக்கப்பட்டதால்  மகளின் கால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரது 10  வயதாகவும் மகள் விருதிஷா 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

அங்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளின் எதிர்வினை காரணமாக  அவரது வலது கால் பாதத்தில் கடுமையாக அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,  ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவே அவரது காலில் ரத்த உறைவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டதாக கோதண்டபாணி குற்றஞ்சாட்டி  சென்னை தலைமை செயலக சாலையில் மகளுக்கு நீதி கோரிஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.

அதன் போது தனது போராட்டத்துக்கு காக்கி உடை தடையாயின் அது தனக்கு  வேண்டாம் எனவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளர்.

இதற்கிடையில் தன்னையும், தன் மகளையும் கருணைக் கொலை செய்யுமாறு  மனு அளித்துள்ளமை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.


என்னையும் மகளையும் கருணைக் கொலை செய்யுங்கள்- கண்ணீர் விட்ட தந்தைsamugammedia குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் மகளின் கால் பாதிக்கப்பட்டதாக மனம் வருந்திய தந்தை தன்னையும், மகளையும் கருணைக் கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும்  கோதண்டபாணி என்பவர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான அளிக்கப்பட்டதால்  மகளின் கால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது 10  வயதாகவும் மகள் விருதிஷா 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளின் எதிர்வினை காரணமாக  அவரது வலது கால் பாதத்தில் கடுமையாக அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,  ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவே அவரது காலில் ரத்த உறைவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டதாக கோதண்டபாணி குற்றஞ்சாட்டி  சென்னை தலைமை செயலக சாலையில் மகளுக்கு நீதி கோரிஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.அதன் போது தனது போராட்டத்துக்கு காக்கி உடை தடையாயின் அது தனக்கு  வேண்டாம் எனவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளர். இதற்கிடையில் தன்னையும், தன் மகளையும் கருணைக் கொலை செய்யுமாறு  மனு அளித்துள்ளமை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement