நடிகரிடம் இருந்து மைக்கை பிடிங்கி மேடையில் இருந்து வெளியேறிய வெற்றிமாறன்; என்ன நடந்துச்சு தெரியுமா?

467

இயக்குனர் வெற்றிமாறன் செய்த செயல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வெற்றிமாறன் ‘சங்கததலைவன்’ படத்தை தயாரித்து இருக்கிறார். மணிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கருணாஸ் விஜே ரம்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றிமாறன் பேசி முடித்த பின்னர் மிகவும் சர்ச்சையான கேள்விகளுக்கு பெயர்போன நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் படத்தின் எழுத்தாளரான பாரதி அவரிடம் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு அவரும் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அத்தோடு ஒருகட்டத்தில் இந்த படத்தின் முடிவு பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவர், எப்படி ஒரு கொலை இன்னொரு கொலைக்கு தீர்வாகுமென்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இதற்கு பதிலளித்த எழுத்தாளர் பாரதி நாதன்,சட்ட ரீதியாக முயற்சி செய்து பார்த்துவிட்டு அது முடியாது என்ற பட்சத்தில் தான் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். போராட்டம் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டமாகவும் அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாகும் மாற்றுவது தான் கம்யூனிசம் என்று எழுத்தாளர் பாரதி நாதன் கூறினார்.

அத்தோடு பாரதி நாதன் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே பரியேறும் பெருமாள் பட நடிகர் மாரிமுத்து பாரதி நாதன் இடம் இருந்து மைக்கை வாங்கி அனைத்திற்கும் மேலாக இது ஒரு படம் என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே எழுந்து வந்த வெற்றிமாறன் மாரிமுத்துவிடம் இருந்து மைக்கை பிடுங்கி அதை எல்லாம் சொல்லாதீங்க அதெல்லாம் சொல்லாதீங்கதென்று மேடையிலிருந்து கொஞ்சம் கோபமாக கிளம்பிவிட்டார் இதனால் மேடையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: