பால் குளியலும் அதன் நன்மைகளும்!

பால் குளியலால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் பால் குளியல் தொடர்பில் முழுமையாக ஆராய்வோம்.

பால் குளியலுக்கு பாலை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. நாம் குளிக்கும் நீரில் ஒன்றரை முதல் இரண்டு கப் பாலை கலந்தாலே  போதுமானது. பசும்பாலை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

பாலுடன் ரோஜா இதழ்கள்,ஓட்ஸ், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து கொள்ளலாம். பால் குளியல் மூலம் குழந்தைகளை குளிப்பாட்டுவது சிறந்தது.

அதேவேளை தலைவலிப் பிரச்சினைகள் உள்ளவர்கள்  வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்தும் குளியல் போடலாம். இது தசைகளை மட்டுமின்றி மனதையும் தளர்வடைய செய்ய உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். பால் குளியலுக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது சிறந்தது.

அதேவேளை வயதான தோற்றம் உள்ளவர்கள்  விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்வதை எதிர்க்கும் பண்புகள் பாலில் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை