இங்கிலாந்தில் உள்ள இந்திய பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்த வெளிவிவகார அமைச்சர்.

கடந்த புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் s. ஜெய்ஷ்ங்கர், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த வாரங்களில் பாக்கிஸ்தான் – இந்தியா ஆசியாக்கிண்ணப் போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்குள்ள இந்திய பிரஜைகளின் நிலை தொடர்பில் இந்திய அரசாங்கம் கவலையடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த திங்கட்க்கிழமை, இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஆணையகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

அத்தோடு, இந்திய மக்களிற்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் இங்கிலாந்து அதிகார சபையிடம் கேட்டிருந்தது இந்தியா. கலவரங்கள் காரணமாக கிழக்கு லீஸ்ட்டர் நகரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை