திடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்!

73

இலங்கையின் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் யாழ் வருகை தந்த அமைச்சர் யாழ் பல்கலை கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சரை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் வரவேற்றிருந்ததுடன் இந்த சந்திப்பில் பல்கலை கழக அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: