மிரிஹான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
மிரிஹான பெங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை முனனெடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் போது மிரிஹானை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றிற்கு தீ வைத்தமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் சிலர் காணொளி வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் 071-85 94 922, 011-244 13 790 மற்றும் 011-24 22 176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தருமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
- நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்