Wednesday, May 18, 2022

18 நிமிடத்தில் சார்ச் ஏறும் மொபைலா?

ஸ்மாட் போன்களின் வரத்து தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது.அதிலும் கமெரா,பற்றி சார்ச் ,கேமிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலர் ஸ்மாட் போன்களை கொள்வனவு செய்கின்றனர்.இந்த வரிசையில் விரைவில் 100% சார்ச் ஏறக் கூடியமொபலை Xiaomi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Xiaomi 12 Pro – 5G மொபைல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் அட்டகாசமாக 50 மெகா பிக்சல் பின்பக்க கமெரா வழங்கப்பட்டுள்ளது.இதில் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ள 3 கமெராக்களுமே 50 மெகா பிக்சல் கொண்டது.அதிலும் மெற்றல் பாதுகாப்பு உறையுடன் இந்த கமெரா வடிவமைக்கப்பட்டுள்ளமையால் கமெரா எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.

அத்துடன் 4600 MAH பற்றி திறனுடன்,18 நிமிடத்தில் சார்ச் முழுமையாக ஏறக்கூடிய வகையில் இந்த ஸ்மாட் போன் தயாரிக்கப்பட்டுள்ளது. வளைவான டிஸ்பிளேயுடன் அட்டகாசமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மாட் போன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா முதல் விற்பனையாகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை