மட்டு. கல்லடி பகுதியில் சிக்கிய துப்பாக்கி!

83

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் மீனவர்களின் வலையில்; மீன்களுடன் துப்பாக்கி ஒன்றும் கடலிலிருந்து அகப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரை வலையிலேயே அகப்பட்டுள்ளது.

அதனை, அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இத் துப்பாக்கி ரி56 றக துப்பாக்கி என இனங்கண்டுள்ளமையுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்துப்பாக்கியை குற்றச்செயல்களுடன் ஈடுபட்ட எவரேனும் கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: