மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினராக மோகனராசா மேரி கொன்சி சத்தியப்பிரமாணம்

168

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினராக மோகனராசா மேரி கொன்சி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய உறுப்பினராக மோகனராசா மேரி கொன்சி இன்று ஜக்கிய தேசிய கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான முத்துசாமி முகுந்தகஜன் முன்னிலையில் அவரது மாங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஆசீர்வாதம் சந்தியாகு உயிரிழந்த நிலையில், இவரின் பதவி வெற்றிடமாக காணப்பட்ட.து.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு மோகனராசா மேரி கொன்சி இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திடீரென தீப்பற்றி எரிந்த பட்டா ரக வாகனம்!

கிழக்கில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் பிள்ளையான்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: