திருகோணமலையில் இன்று மட்டும் 60இற்கும் மேற்பட்டோர் கைது- வெளியானது காரணம்..!

169

பயணத் தடையை மீறி வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடிய 60 க்கும் மேற்பட்டோர் இன்றுகிண்ணியாவில் கைது செய்யப்பட்டனர்.

கிண்ணியா புஹாரிச் சந்தியில் இன்று மாலை பொலிஸார் திடீர் வீதிச் சோதனை நவடிக்கையை மேற்கொண்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றோர், ஈருளியில் சென்றோர், வாகனங்களில் சென்றோர் மற்றும் கால் நடையாகச் சென்றோர்களில் பயணத்துக்கான தகுந்த அனுமதி ஆவணங்களை காட்டத் தவறியோர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: