மருத்துவரின் முக கவசத்தை கழற்றும் சுட்டிக்குழந்தை – வைரலாகும் புகைப்படம்!

355

பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தபோது, அழும் அந்த சுட்டிக்குழந்தை மருத்துவரின் முக கவசத்தை கழற்றும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தற்போதைய சூழலில் கொரோனா தொற்றின் அதிவேக பரவலினால் உலகளாவிய மக்கள் அனைவரும் அச்சத்தின் மத்தியில் முடங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இச் சூழலில்,  பிறந்த இந்த சுட்டிக் குழந்தை மருத்துவரின் முகக்கவசத்தை பிடுங்குவது அதிசயமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தின் குறிப்பில், விரைவில் நாம் எல்லோரும் முக கவசத்தை கழற்றப்போகிறோம் என்பதன் அறிகுறியே இது என்று மருத்துவர் சமீர் சியெய்ப் கூறியுள்ளார்.

மேலும், ஒரு பயனர் ‘இது நிச்சயமாக 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக வேண்டும்’ என்ற தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CF9nlvZJYDT/?utm_source=ig_embed