அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழரிடமிருந்த முக்காலி!

170

முற்காலத்தில் காளை மாடுகள் மூலமாகச் சூடடித்தல் செய்யப்பட்ட காலத்தில் நெல்லும் வைக்கோலும் வெவ்வேறாகப் பிரித்து எடுத்தபின்னர் நெல்லோடு சேர்ந்திருக்கும் பதர் தூசு என்பவற்றை அகற்றுவதற்காக கையாளப்பட்ட உத்திதான் இது.

நெல் ‘தூத்துதல்’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளீல் 1970ஆம் ஆண்டிற்கு முன்னர்தான் பாவிக்கப்பட்டதாக குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பின்னரான காலத்தில் உழவு இயந்திரத்தின்மூலமாக சூடடித்தல், தூத்துதல் செயற்பாடு நடைபெற்றது.

தூற்றுவதற்காக பயன்படும் இந்த உபகரணத்தை ‘முக்காலி’ என்று சொல்வார்கள். இதற்கு மூன்று தடிகள்தான் பயன்படுத்தப்படும்.

எவ்வேறாயினும் இப்போது சூடடிக்க, நெல் தூத்துதல் செயற்பாடுகளுக்கு பிரத்தியேக இயந்திரம் வந்துவிட்டது. என்னதான் நவீன இயந்திரங்கள் வந்தாலும் முன்னைய காலங்களில் நாம் கையாண்ட முறைகளில் நாம் அனுபவித்த சந்தோஷங்கள் இல்லை என்றுதால் சொல்லலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: