வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களை தாண்டி பல்வேறு இடங்களிலும்நினைவுகூறப்படுகின்றது.

இந்நிலையில் குறிப்பாக நேற்றையதினம் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்ட களத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல்கள் இன்று இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இன்றையதினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை