யாழ்ப்பாணம் – குருநகர் பிரதேசத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலினை முன்னிட்டு உயிர் நீர்த்தவர்களுக்காக நெய் தீபம் ஏற்றி மலர் தூவி வழிபட்டு ”முள்ளிவாய்க்கால் கஞ்சி ”வழங்கி வைக்கப்பட்டது .
குறித்த நிகழ்வானது குருநகர் 5 மாடி கட்டடத்திற்கு முன் உள்ள மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வினை சமூக ஆர்வலர்கள் பலர் இணைந்து கஞ்சி வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் அப்பிரதேச மக்கள் ,இளைஞர்கள் , சிறுவர்கள் , பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.