முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சும் நிகழ்வு வல்லையில் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு “இன விடுதலையினை தேடி முள்ளிவாய்க்காலினை நோக்கி” என்ற கருப்பொருளில் பொத்துவிலில் இருந்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றையதினம் இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கிய மற்றுமொரு மாபெரும் மக்கள் பேரணி வல்லை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

முதலில் வல்லை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சும் நிகழ்வு நடைபெற்றது.

மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றையதினம் பல்கலைக்கழகத்திலும், செம்மணிப் பகுதியிலும், கொடிகாமத்திலும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய மக்கள் எழுச்சி பேரணியானது வல்வெட்டித்துறையில் இருந்து பொலிகண்டி வரை நடைபயணம் ஆகவும் மீண்டும் பருத்தித் துறை நகரில் நடைபவனி ஆகவும் வந்திரி சந்தியில் இருந்து விலேடி சந்திவரை நடை பவனி ஆகவும் அதன் பின்னர் சங்கிலியன் மன்னனின் சிலையில் இருந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு இடம் வரை நடை பவனி ஆகவும் பருத்தித்துறை வீதியால் மீண்டும் பரமேஸ்வரா சந்தியில் இருந்து பல்கலைக்கழகம் வரை அதனை தொடர்ந்து காங்கேசன் துறை வீதி வண்ணார் பண்ணை சிவன் ஆலயத்தில் இருந்து முட்டாசு சந்தியில் திரும்பி ஸ்டான்லி வீதி வழியே வெலிங்டன் சந்தி வந்து வைத்தியசாலைக்கு பின்பக்கமாக மின்சார நிலைய வீதி ஊடாக யாழ் பேருந்து நிலையத்திற்கு அருகிலே இருக்க கூடிய வைரவர் ஆலயத்திற்கு வந்து ஆஸ்பத்திரி வீதிக்கு வந்து ஆஸ்பத்திரி முன்பாக திரும்பி மீண்டும் ஆஸ்பத்திரி வீதி ஊடாக சத்திர சந்திக்கு வந்து காங்கேசன் துறை வீதி ஊடாக உலக தமிழாராய்ச்சி மாநாடு படு கொலை நடைபெற்ற நினைவிடத்திற்கு அங்கே அஞ்சலி செலுத்தப்பட்டு மீண்டும் யாழ் நகரில் இருந்து அடுத்த நடை பவனி சாவகச்சேரி நகரத்தில் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து கொடிகாமம் நகரத்திலே மிருசுவில் படுகொலை நினைவேந்தல் நிமித்தமாக நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து பரந்தனிலே நாளைய பேரணி முடிவு பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை