• Apr 17 2024

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்!

Sharmi / Dec 13th 2022, 11:03 pm
image

Advertisement

எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologists Researchers) பல பழங்கால மம்மிகளைக் கண்டறிந்துள்ளனர்.

அவற்றின் வாயில் திடமான சிப் போன்ற தங்க நாக்குகள் (Golden tongue) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மி (Mummies) சடலங்களின் பல மம்மிகளில் தங்க நாக்கு இருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் பாரம்பரிய உண்மையை (Ancient truth about golden tongue mummies) இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெய்ரோவிற்கு (Cairo) வடக்கே சுமார் 40 மைல் தொலைவில் உள்ள மத்திய நைல் டெல்டாவில் உள்ள குவெயிஸ்னா நெக்ரோபோலிஸ் (Quweisna necropolis) பகுதியில், கிமு 300 மற்றும் 640 ஆம் ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட மம்மி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மிகளில் (preserved mummy corpses) உள்ள பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட சடலங்களின் வாய்களில் தங்க நாக்கு இருக்கும் விசித்திரமான உண்மையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.

அந்த இடத்தில் உள்ள கல்லறைகளை ஆய்வு செய்த நிபுணர்கள், மம்மிகளின் வாயில் மனித நாக்கு போன்ற வடிவிலான தங்கச் சிப்களுடன் (golden tongue mummies) பல மம்மிகளைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார்.

தொல்பொருள் ஆய்வுக்கான உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் டாக்டர் முஸ்தபா வஜிரி, நியூயார்க் போஸ்ட் (New York Post) மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பில் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

எம்பாமிங் செயல்பாட்டின் (embalming process) போது, ​​இறந்தவரின் உண்மையான நாக்குகள் அகற்றப்பட்டு, அந்த உறுப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தங்கத் துண்டாக இந்த தங்க நாக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எகிப்திய புராணங்களில் இருப்பது போல, மனிதனின் நாக்கு இறந்த பின் அழுகிவிடும் என்பதனால், இறந்த பிறகு செல்லும் உலகில் பேச இந்த தங்க நாக்குகள் தேவைப்படும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொல்பொருளியல் உச்ச கவுன்சிலின் எகிப்திய தொல்லியல் துறையின் தலைவர் டாக்டர் அய்மன் அஷ்மாவியின் கூற்றுப்படி, ஒவ்வொரு புதைகுழி நிலையும் வெவ்வேறு சடங்குகள் மற்றும் மம்மிகளை அடக்கம் செய்யும் முறைகளின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். காரணம், நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டை கண்டுபிடித்தனர்.

அந்த மண்டை ஓட்டின் வாயில் நாக்கு வடிவ தங்க சில்லுகளுடன் ஒரு மம்மி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது "ஒசைரிஸின் பெரிய கல்லறை" என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரியாவிற்கு அருகிலுள்ள டபோசிரிஸ் மேக்னாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள் எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologists Researchers) பல பழங்கால மம்மிகளைக் கண்டறிந்துள்ளனர்.அவற்றின் வாயில் திடமான சிப் போன்ற தங்க நாக்குகள் (Golden tongue) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மி (Mummies) சடலங்களின் பல மம்மிகளில் தங்க நாக்கு இருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இதன் பின்னணியில் இருக்கும் பாரம்பரிய உண்மையை (Ancient truth about golden tongue mummies) இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெய்ரோவிற்கு (Cairo) வடக்கே சுமார் 40 மைல் தொலைவில் உள்ள மத்திய நைல் டெல்டாவில் உள்ள குவெயிஸ்னா நெக்ரோபோலிஸ் (Quweisna necropolis) பகுதியில், கிமு 300 மற்றும் 640 ஆம் ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட மம்மி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மம்மிகளில் (preserved mummy corpses) உள்ள பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட சடலங்களின் வாய்களில் தங்க நாக்கு இருக்கும் விசித்திரமான உண்மையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.அந்த இடத்தில் உள்ள கல்லறைகளை ஆய்வு செய்த நிபுணர்கள், மம்மிகளின் வாயில் மனித நாக்கு போன்ற வடிவிலான தங்கச் சிப்களுடன் (golden tongue mummies) பல மம்மிகளைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார்.தொல்பொருள் ஆய்வுக்கான உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் டாக்டர் முஸ்தபா வஜிரி, நியூயார்க் போஸ்ட் (New York Post) மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பில் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.எம்பாமிங் செயல்பாட்டின் (embalming process) போது, ​​இறந்தவரின் உண்மையான நாக்குகள் அகற்றப்பட்டு, அந்த உறுப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தங்கத் துண்டாக இந்த தங்க நாக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எகிப்திய புராணங்களில் இருப்பது போல, மனிதனின் நாக்கு இறந்த பின் அழுகிவிடும் என்பதனால், இறந்த பிறகு செல்லும் உலகில் பேச இந்த தங்க நாக்குகள் தேவைப்படும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தொல்பொருளியல் உச்ச கவுன்சிலின் எகிப்திய தொல்லியல் துறையின் தலைவர் டாக்டர் அய்மன் அஷ்மாவியின் கூற்றுப்படி, ஒவ்வொரு புதைகுழி நிலையும் வெவ்வேறு சடங்குகள் மற்றும் மம்மிகளை அடக்கம் செய்யும் முறைகளின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். காரணம், நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டை கண்டுபிடித்தனர்.அந்த மண்டை ஓட்டின் வாயில் நாக்கு வடிவ தங்க சில்லுகளுடன் ஒரு மம்மி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது "ஒசைரிஸின் பெரிய கல்லறை" என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரியாவிற்கு அருகிலுள்ள டபோசிரிஸ் மேக்னாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement