• Sep 29 2024

பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பெற்றோருக்கு அறிவுரை கூறும் நாமல் ராஜபக்ச! samugammedia

Tamil nila / Sep 29th 2023, 3:24 pm
image

Advertisement

நாட்டின் பழைய அல்லது புதிய தலைமுறையினர் எவராக இருந்தாலும் நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தங்காலை தொகுதியின் கிளை அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல் ராஜபக்ச,

கலாசாரத்தை மதிக்கும் பிள்ளைகளை சமூகத்திற்கு வழங்குவது பெற்றோரின் கடமை.

சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய எந்த கலாசாரத்திற்கும் உகந்த வகையில் பிள்ளைகளை உருவாக்க வேண்டும். இதுவே பெற்றோர் என்ற முறையில் தமது கடமையும் பொறுப்புமாகும்.

மேலும் முஸ்லிம் பிள்ளை முஸ்லிம் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும், தமிழ் இளைஞன் வேட்டியை அணியவும் சிங்கள இளைஞன் சரத்தை அணியும் வெட்கப்படக் கூடாது.

கலாசாரம் மற்றும் சமயங்களை மதிக்கும் சமூகத்தின் ஊடாக நாடடின் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதிபலன்களை அடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 37 வயதான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பெற்றோருக்கு அறிவுரை கூறும் நாமல் ராஜபக்ச samugammedia நாட்டின் பழைய அல்லது புதிய தலைமுறையினர் எவராக இருந்தாலும் நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தங்காலை தொகுதியின் கிளை அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல் ராஜபக்ச,கலாசாரத்தை மதிக்கும் பிள்ளைகளை சமூகத்திற்கு வழங்குவது பெற்றோரின் கடமை.சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய எந்த கலாசாரத்திற்கும் உகந்த வகையில் பிள்ளைகளை உருவாக்க வேண்டும். இதுவே பெற்றோர் என்ற முறையில் தமது கடமையும் பொறுப்புமாகும்.மேலும் முஸ்லிம் பிள்ளை முஸ்லிம் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும், தமிழ் இளைஞன் வேட்டியை அணியவும் சிங்கள இளைஞன் சரத்தை அணியும் வெட்கப்படக் கூடாது.கலாசாரம் மற்றும் சமயங்களை மதிக்கும் சமூகத்தின் ஊடாக நாடடின் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதிபலன்களை அடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 37 வயதான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement