அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பிய நாமல்!

கடந்த திங்கள் கிழமை நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலைக்கு மத்தியில் அரச தரப்பினரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த அசம்பாவிதங்களின் போது ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினராக அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆரம்பம் முதல் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகின.

இதேவேளை பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில்,

மாண்புமிகு மரணம். முதலில் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வைத்திய பரிசோதனையில் அது நிரூபணமாகியுள்ளது. இது எந்த அடிப்படையில் தற்கொலையாக சித்தரிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. & தற்கொலை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தது யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை