மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் நாசா!

நாசாவின் ஆர்டெமிஸ் ரொக்கெட் நேற்று முன்தினம் நிலவுக்கு புறப்பட ஆயத்தமான நிலையில் , அதில் உள்ள இயந்திர மொன்றில் கோளாறு கண்டறியப்பட்டதால் இறுதி நேரத்தில் ரொக்கெட்டை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது .

ரொக்கெட் புளோரிடா வின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவு வதற்கு தயாராக இருந்தது . ஆனால் , உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட அந்த ரொக்கெட் ஏவும் நேரம் தள்ளி வைக்கப்பட்டு வந்தது .

ரொக்கெட்டின் உள்தாங்கியில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஒக்சிஜனை இணைக்கும் தாங்கிகள் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது . அதை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் , ஆர்டெ மிஸ் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்யும் பணியில் குழு வினர் ஈடுபட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது .

இந்நிலையில் ரொக்கெட்டை ஏவும் திட்டத்தை செப்டெம்பர் 2 அல் லது செப்டம்பர் 5 இல் செயற் படுத்த நாசா திட்டமிட்டுள்ளது . அமெரிக்கா ரஷ்யா இடையே பனிப்போர் முற்றி இருந்த 1960 களில் விண்வெளி பயணங்களில் இரு நாடுகளும் கடும் போட்டியிட்டு வந்தன .

அப்போது 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி உலக சரித்திரத்தில் பெரும் சாத மீண்டும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப நாசா முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கான முதற் கட்டமாக ஆர்டெமிஸ் நிலவுப் பயணம் அமையவுள்ளது .

அமெரிக்கா – ரஸ்யா இடையே பனிப்போர் முற்றி இருந்த 1960 களில் விண்வெளி பயணங்களில் இரு நாடுகளும் கடும் போட்டியிட்டு வந்தன.

அப்போது 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி உலக சரித்திரத்தில் பெரும் சாதனையைப் படைத்தது .

அதற்கு பின் மனிதனின் நிலவு பயணத்திற்காக நாசா பல பில்லியன்களை செலவு செய்த நிலையில் 1972 இல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற் சிகளில் இருந்து விலகியது . அதற்குப் பின் வேறு எந்த நாடுகளும் இந்த முயற் சிகளை மேற்கொள்ள வில்லை . இந்நிலையில் தற்போது நாசா மீண்டும் மனிதர் களை நிலவுக்கு அனுப்பு வதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது .

2025 இற்குள் மனிதர் களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் ரொக் கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது . இந்த ரொக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக் கான ஓரியன் விண்கல த்தை சுமந்து செல்லவுள்ளது .

2030 களில் அல்லது அதற்குப் பிறகு மிக விரைவில் விண்வெளி வீரர்களுடன் செவ்வாய் கிரகத் திற்குச் செல்வதற்கான ஒரு வழியாக , சந்திரனுக்கான இந்தப் பயணத்தை நாசா பார்க்கிறது . . ஆர்டெமிஸ்ஸின் மூன் றாவது பயணத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீரர் கால்பதிப்பார் என்று நாசா உறுதியளித்துள்ளது .

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை