• Apr 20 2024

நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கு தருமபுர ஆதீனத்தினால் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!samugammedia

Sharmi / May 26th 2023, 1:54 pm
image

Advertisement

ஈழத்தின் தலைசிறந்த  நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பஞ்சமூர்த்தி குமரனுக்கு தமிழ்நாடு தருமபுர ஆதீனத்தினால் உயர் விருதான 'நாதஸ்வர கலாநிதி' விருதும், தங்க பதக்கமம் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் மண்ணைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி குமரன்  ஒரு கலைப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் சொத்து என்லாம்.  ஈழ மண்ணில் நாதஸ்வர கலை வரலாற்றில் ஒரு காலத்தில் நாதஸ்வர இசைமூலம் உலகையே வலம் வந்த நாதஸ்வர சகோதரர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் மூத்த கலைப் பொக்கிஷம் பஞ்சமூர்த்தியின் இளைய புத்திரரான குமரன் சிறுவயது முதலே கலைஞானம் இயல்பாக கைவரப் பெற்றவர்.


தன் தந்தை வழியாக நாதஸ்வரத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் சிறுவயது முதலேயே கற்றுக்கொண்ட இவர் நாதஸ்வரத்துடன் இணைந்து பல ஆசிரியர்கள் ஊடாக கற்றுக் கொண்ட சங்கீதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்து சிறுவயதிலேயே தன் தந்தையோடு இணைந்து ஆலயங்கள், கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.



இவ்வாறு ஆரம்பித்த இசைப்பயணம் இலங்கை தாண்டி உலக நாடுகள் பலவற்றிலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்வதுடன்  இவரது நாதஸ்வர இசைக்கு பல லட்சக்கணக்கானோர் அடிமை எனலாம்.



இவ்வாறாக பல்திறன் கொண்ட ஒரு பாரம்பரியத்தின் இசை ஆளுமையாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்றுவரை ஈழத்து நாதஸ்வர இசையை உலகளாவிய ரீதியில் ரசிக்கும் படியாக பல திறன்களைக் காட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக மிளிரும் பஞ்சமூர்த்தி குமரன் இன்னும் இன்னும் இத்துறை சார்ந்து மிளிர்வார் என்பதுடன் தருமபுர ஆதீனத்தினால் உயர்ந்த விருதான 'நாதஸ்வர கலாநிதி' விருது வழங்கப்பட்டமைக்கு  கடல்  கடந்து வாழும் இசை ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கு தருமபுர ஆதீனத்தினால் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு.samugammedia ஈழத்தின் தலைசிறந்த  நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பஞ்சமூர்த்தி குமரனுக்கு தமிழ்நாடு தருமபுர ஆதீனத்தினால் உயர் விருதான 'நாதஸ்வர கலாநிதி' விருதும், தங்க பதக்கமம் கௌரவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோண்டாவில் மண்ணைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி குமரன்  ஒரு கலைப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் சொத்து என்லாம்.  ஈழ மண்ணில் நாதஸ்வர கலை வரலாற்றில் ஒரு காலத்தில் நாதஸ்வர இசைமூலம் உலகையே வலம் வந்த நாதஸ்வர சகோதரர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் மூத்த கலைப் பொக்கிஷம் பஞ்சமூர்த்தியின் இளைய புத்திரரான குமரன் சிறுவயது முதலே கலைஞானம் இயல்பாக கைவரப் பெற்றவர். தன் தந்தை வழியாக நாதஸ்வரத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் சிறுவயது முதலேயே கற்றுக்கொண்ட இவர் நாதஸ்வரத்துடன் இணைந்து பல ஆசிரியர்கள் ஊடாக கற்றுக் கொண்ட சங்கீதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்து சிறுவயதிலேயே தன் தந்தையோடு இணைந்து ஆலயங்கள், கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.இவ்வாறு ஆரம்பித்த இசைப்பயணம் இலங்கை தாண்டி உலக நாடுகள் பலவற்றிலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்வதுடன்  இவரது நாதஸ்வர இசைக்கு பல லட்சக்கணக்கானோர் அடிமை எனலாம்.இவ்வாறாக பல்திறன் கொண்ட ஒரு பாரம்பரியத்தின் இசை ஆளுமையாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்றுவரை ஈழத்து நாதஸ்வர இசையை உலகளாவிய ரீதியில் ரசிக்கும் படியாக பல திறன்களைக் காட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக மிளிரும் பஞ்சமூர்த்தி குமரன் இன்னும் இன்னும் இத்துறை சார்ந்து மிளிர்வார் என்பதுடன் தருமபுர ஆதீனத்தினால் உயர்ந்த விருதான 'நாதஸ்வர கலாநிதி' விருது வழங்கப்பட்டமைக்கு  கடல்  கடந்து வாழும் இசை ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement