• Apr 20 2024

தேர்தல் இடைநிறுத்தம் - உயர் நீதிமன்றத்தை நாடியது தேசிய மக்கள் சக்தி! SamugamMedia

Tamil nila / Mar 14th 2023, 11:01 pm
image

Advertisement

மார்ச் மாதம் 9  ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி தேசிய மக்கள் சக்தி  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க ஆகியோர் நேற்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.


நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர், பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையின் 35 பேரது பெயர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்தல் இடைநிறுத்தம் - உயர் நீதிமன்றத்தை நாடியது தேசிய மக்கள் சக்தி SamugamMedia மார்ச் மாதம் 9  ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி தேசிய மக்கள் சக்தி  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க ஆகியோர் நேற்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர், பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையின் 35 பேரது பெயர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement