• Apr 19 2024

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும்,ஊர்வலமும் முன்னெடுப்பு...! samugammedia

Sharmi / May 1st 2023, 3:58 pm
image

Advertisement

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக்கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று(01) காலை இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

ஊர்வலத்தின் போது விலையேற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோசங்கள் எழுப்பபட்டதுடன், ஐஎம்எப்  உடன்படிக்கை சித்தரிக்கும் ஊர்தியும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும்,ஊர்வலமும் முன்னெடுப்பு. samugammedia புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக்கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று(01) காலை இடம்பெற்றது.வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்திசன், தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். ஊர்வலத்தின் போது விலையேற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோசங்கள் எழுப்பபட்டதுடன், ஐஎம்எப்  உடன்படிக்கை சித்தரிக்கும் ஊர்தியும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement