டி.வி ரிமோட்டால் பறிபோன பச்சிளங்குழந்தையின் உயிர்: நடவடிக்கை எடுக்கவில்லை!

55

அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் எதிர்வு கூறினார்.
 
மினி சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் தயாரித்தது. அந்த சிலை 3 மீட்டர் (கிட்டத்தட்ட 10 அடி) உயரம் கொண்டது. அந்த புதிய சுதந்திர தேவி சிலை நேற்று பிரான்சில் இருந்து கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4-ந் தேதி நியூயார்க் நகரை சென்றடையும். எல்லீஸ் தீவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிலை காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையை சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைத்துச் செயலாற்றக்கூடிய, ஆசியப்பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைமைத்துவமொன்று தற்போது எமது நாட்டிற்குத் தேவைப்படுகின்றது. அத்தகைய தலைமைத்துவத்திற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுகின்றன. எனவே நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்காகவும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்காகவுமே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்வதற்குத் தீர்மானித்திருக்கிறார் என  ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை அனுப்பின. அமெரிக்காவும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு அதிக உதவிகள் செய்யப்படும்” என்று கூறினார்

புதிய களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான நான்கு வழிப்பாதைகளுடன் கூடிய தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளைப் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

துபாயில் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் தான் பெற்ற 3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்

எமது அரசாங்க காலத்தில் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் அந்த சுமையை பொது மக்கள் மீது சுமத்தவில்லை. ஆனால் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். அத்துடன் இந்திய, சீன அரசாங்கங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. இலங்கை அரசாங்கமே எமது நாட்டை காட்டிக்கொடுத்து வருகின்றது. அதனாலே இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் எதிர்ப்பு என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்றைய தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 231 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 316- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம் 0.44 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 521- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 41 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில் தொற்று பாதிப்புடன் 4,962- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான நியூ டயமன் கப்லுக்காக பல மில்லியன் டொலர்களை அரசாங்கம் நட்டயீடாக பெற்றுக் கொண்டது. எனினும் அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது பேர்ள் கப்பலுக்கு கிடைக்கப்பெறும் நட்டயீட்டுக்கு என்ன நடக்கும் என்பதையும் எம்மால் கூறமுடியாது என்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பேர்ள் கப்பல் தீப்பரவலையடுத்து அதற்காக நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது. மாறாக இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்,நர்ஸ் அலட்சியத்தால், பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல், துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கபப்டுகிறது, இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் மேதகு யூரி பி. மேட்டரி, கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை நேற்று  (07.06.2021) ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

தற்போதைய உலகின் நவீன வாழ்க்கை முறைக்கமையை ஒவ்வொருவரின் நேரமும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது.

அந்த வகையில் இலங்கை, இந்தியா உட்பட்ட உலக நடப்புக்களை அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் ஆவலாக உள்ளனர், ஆனால் விரிவாக ஒவ்வொரு விடயத்தையும் அறிந்துகொள்ள பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றன.

இதனடிப்படையில் ஒவ்வொரு வாசகர்களும், பார்வையாளர்களும் சுருக்கமாகவும், வேகமாகவும் உலக விடயங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் 09.AM -12.PM – 04.PM மற்றும் 07.PM போன்ற நேரங்களில் News247 Samugam என்கின்ற YOUTUBE சனல் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.

அந்த வகையில் காலை 07.AM மணிக்கான செய்தி சுருக்கத்தின் காணொளிதான் மேலுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: