• Mar 29 2024

கிளிநொச்சி கௌதாரி முனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதி இல்லை! samugammedia

Chithra / Jun 1st 2023, 12:51 pm
image

Advertisement

கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறிதரன், அங்கயன் இராமநாதன், செ கஜேந்திரன் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருந்த கலந்து கொண்டனர்.

இதன்போது, அதாணி குடும்பத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் கூழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது. இதன்போது வாதங்கள் இடம்பெற்றன.


குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது. 

குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பில் எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது எனவும் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சி கௌதாரி முனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதி இல்லை samugammedia கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறிதரன், அங்கயன் இராமநாதன், செ கஜேந்திரன் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருந்த கலந்து கொண்டனர்.இதன்போது, அதாணி குடும்பத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் கூழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது. இதன்போது வாதங்கள் இடம்பெற்றன.குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது. குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பில் எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது எனவும் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement