கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மறுதினமே முதலாவது கொரோனா தொற்று மரணமும் பதிவாகியது.
இந்நிலையில் வடகொரியா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையிலும் வடகொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் இதுவரை 03 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை வடகொரியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் மற்றுமொரு காய்ச்சல் வடகொரியாவில் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 269,510 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வடகொரியாவில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56 என அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.