அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தயாராகின்றது வடகொரியா

வடகொரியா அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கம் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியா ஆயுத உற்பத்தி மற்றும் அமெரிக்காவின் இராணுவத்திற்கு சமபலம் பொருந்திய இராணுவத்தை உருவாக்குவது என்பது தொடர்பில் இரகசியமான கட்டமைப்புக்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ‘ராய்ட்டர்ஸ்’ செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அணு ஆயுத பரிசோதனையினை மேற்கொள்ள இருப்பதாக வடகொரிய அதிபர் ‘கிம்’ அவர்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

அணு ஆயுத பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வட கொரியாவிற்கு தடை விதித்திருந்த போதிலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே வட கொரியா அணு ஆயுதத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை மையம் அமைந்திருக்கம் ‘புங்கெய்ரி’ என்னும் இடத்தில் தொடர் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த மார்ச் மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை வடகொரியா வெளிப்படையாக பரிசோதித்திருந்தமை அமெரிக்கா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடகொரியா தற்பொழுது தன்னுடைய ஏழாவது அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை