வடகொரியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவலடைந்து வருகின்றது.
இந்நிலையில் சில வாரங்களிலேயே இலட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டின் சுகாதார தரப்பு கடுமையாக போராடி வருகின்றது.
அதேவேளை பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக வேண்டும் என அந்த நாட்டு அரசு ஊடகம் பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது .
குறிப்பாக உலக நாடுகள் சில வடகொரியாவுக்கு உதவுவதாக கூறினாலும் வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவரும் வட கொரிய அரசாங்கம் கொரோனாவை எதிர்கொள்ள தற்போது பாரம்பரிய மருந்துகளை பரிந்துரைத்து மேலும் போதுமான மருத்துவ கட் டமைப்பு இல்லாமை மற்றும் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட கொரோனாவை காரணங்களால் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது .
இதேவேளை கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி , மூலிகை தேநீர் பருகுங்கள் நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.