வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து மரியாதை மற்றும் வடமாகாண அக்கறை மற்றும் இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.
இந்தச் சுருக்கமான சந்திப்பின் போது, தீபகற்பத்தில் சிவில் – இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து சிவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
சுமுகமான சந்திப்பின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் வடமாகாண ஆளுநருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.
இராணுவத் தொண்டர் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோரும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்
- இலங்கையில் கடவுச்சீட்டு கையகப்படுத்தப்பட்ட ஸ்கொட்லாந்து பெண்ணுக்கு உதவும் இங்கிலாந்து!
- மலேசியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் கண்காணிப்பு!
- இலங்கையில் போசனை மிக்க உணவுகளின் விலை 156 வீதத்தால் உயர்வு!
- இலங்கை பயணிகளின் பயணப் பொதிகளை வெளிநாடுகளிலேயே கைவிட்டுவிட்டு வரும் விமானங்கள்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka