வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

179

விசா அனுமதிபெற்று, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்களுக்கு, தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வகையை செலுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுமதிக்காதிருக்க மத்திய கிழக்கின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன.

இதனால் குறித்த நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை தமக்கு வழங்குமாறு, அந்நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: