பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

416

பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் மேலும் ஒருவருக்கு 2 ஆம் தடவை பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதிவரை வங்கியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி உதவுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: