• Mar 29 2024

தொலைபேசியில் இருந்து உதிரும் இலக்கங்கள்! சஜித் - பௌசி இடையிலான மோதல் தீவிரம்..! காய்நகர்த்தும் ரணில் samugammedia

Chithra / Apr 30th 2023, 10:13 am
image

Advertisement

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை மீதான வாக்கெடுப்பு கடந்த 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி இதனை ஆதரிப்பதாக அறிவித்த போதும் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி, யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நான்தான் முதலில் கூறினேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். 

எனினும், நாடு மற்றும் இளைஞர்களின் நலன்களில் அக்கறையின்றி வாக்களிக்காமல் அவர் சென்றுவிட்டார்.

எனினும், நாட்டின் நலன்கருதி அதனை நான் ஆதரித்தேன். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பயன் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசியில் இருந்து உதிரும் இலக்கங்கள் சஜித் - பௌசி இடையிலான மோதல் தீவிரம். காய்நகர்த்தும் ரணில் samugammedia எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை மீதான வாக்கெடுப்பு கடந்த 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.ஐக்கிய மக்கள் சக்தி இதனை ஆதரிப்பதாக அறிவித்த போதும் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி, யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.இந்நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நான்தான் முதலில் கூறினேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். எனினும், நாடு மற்றும் இளைஞர்களின் நலன்களில் அக்கறையின்றி வாக்களிக்காமல் அவர் சென்றுவிட்டார்.எனினும், நாட்டின் நலன்கருதி அதனை நான் ஆதரித்தேன். ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பயன் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement