• Apr 19 2024

காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு – அங்கஜன்

Chithra / Dec 3rd 2022, 10:12 am
image

Advertisement

வடக்கில் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக பல ஏக்கர் காணிகள் விடுக்கப்படாமல் இருப்பதாக அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தில் காணி அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்த குழு நிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறு விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை விரைவாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் ராமநாதன் கேட்டுகொண்டார்.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வித்தியாசமான சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டுவந்தால் அதற்கு ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு – அங்கஜன் வடக்கில் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக பல ஏக்கர் காணிகள் விடுக்கப்படாமல் இருப்பதாக அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தில் காணி அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்த குழு நிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இவ்வாறு விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை விரைவாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் ராமநாதன் கேட்டுகொண்டார்.மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வித்தியாசமான சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.அவ்வாறு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டுவந்தால் அதற்கு ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement