பொலிஸாரால் நாய் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயம்!

60

களுத்துறையில் நோயுற்ற நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

களுத்துறை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரால் ரேபிஸ் நோய் கொண்ட நாய் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது அருகிலிருந்த நபரின் மீது தவறுதலாக பட்டதில் குறித்த நபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நாய் 10 க்கும் மேற்பட்ட நபர்களை கடித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, இன்று காலை பொலிஸார் குறித்த பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன் போது, உப பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நாய் உயிரிழந்துள்ளது.

பின்பு, அங்கிருந்த நபரொருவர் மீதும் துப்பாக்கிச் சூடு தவறுதலாக மேற்கொள்ளப்பட்டத்தில் 60 வயதுடைய நபர் காயமடைந்து, களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: