மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை மைலம்பாவெளி,காமாட்சியம்மன் ஆலய வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் தன்னாமுனையை சேர்ந்த 40வயதுடைய முத்துலிங்கம் சிவாகரன் என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து கம்பிவேலியில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் மீட்க்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.