சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணுக்கு சூடு வைத்த சாமியார் – தீவிர சிகிச்சையில் இளம்பெண்!

379

ராஜஸ்தானில் சூனியம் இருப்பதாக கூறி போலி பெண் சாமியார் ஒருவர் பெண்ணின் உடல் முழுவதும் சூடான கம்பியால் குத்திய கொடூரம் இடம்பெற்றுள்ளது.

ராஜஸ்தான் – அஜ்மீர் மாவட்டம் பில்வாராவில் 40 வயது பெண் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக அந்த ஊரில் உள்ள சூனியக்கார பெண்ணிடம் தனது வேதனைகளை கூறியிருக்கிறார்.

குறைகளை கேட்ட போலி பெண் சாமியார் சந்தோஷி தேவி அப்பெண்ணுக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக கூறி, சூனியத்தை எடுக்க 1000 ரூபாய் ஆகுமென்று வாங்கிக் கொண்டுள்ளார்.
மேலும், சூனியத்தை எடுக்க மறுநாள் வர வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பியுள்ளார்.

அதன்படி அந்தப் பெண் மறுநாள் தனது உறவினர்களுடன் சந்தோஷி தேவியிடம் சென்றிருக்கிறார்.

அப்போது அந்த பெண்ணை படுக்க வைத்த போலி சாமியார் பூஜைகள் என்ற பெயரில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை பெண்ணின் உடல் முழுவதும் குத்தியுள்ளார்.

அந்தப் பெண் வலியால் துடித்து கதறி சத்தம்போட்டுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்த பொலிஸார், அப்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிஸார், மேலும் மூன்று போலி சாமியார்களைகைது செய்துள்ளனர்.