• Sep 30 2024

சைவ சமயத்தின் மீதான அடக்குமுறை இலங்கையில் தீவிரமாக்கப்பட்டுள்ளன - சிவசிறி காந்தக் குருக்கள் குற்றச்சாட்டு! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 5:04 pm
image

Advertisement

இலங்கையில் தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம்  இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் அவர்களது ஆதிக்கத்தை செலுத்திவருவதாக நாகதம்பிரான் ஆலய குருவான சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் இனத்தின் விடுதலையை நோக்கி, பல வடிவங்களிலே போராடி இருக்கின்றார்கள் ஆனாலும் அதற்கான முற்றுப்புள்ளியை அடைய முடியாத ஒரு நிலையில் இன்று தமிழ் தேசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வெடுக்கு நாறிமலை, குருந்தூர் மலை போன்ற இடங்களிலே விக்கிரகங்களை அழித்து அவற்றை உடைத்து சிதைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று சர்வதேச ரீதியில் சைவ சமயத்தில் மரபுரிமைகள், வழிபாடுகள் அந்நிய தேசங்களில் வளர்ந்து வருகின்ற போதும், இலங்கை  திருநாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சைவ சமயத்தின் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்படுவதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.


சைவ சமயத்தின் மீதான அடக்குமுறை இலங்கையில் தீவிரமாக்கப்பட்டுள்ளன - சிவசிறி காந்தக் குருக்கள் குற்றச்சாட்டு samugammedia இலங்கையில் தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம்  இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் அவர்களது ஆதிக்கத்தை செலுத்திவருவதாக நாகதம்பிரான் ஆலய குருவான சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழர்கள் இனத்தின் விடுதலையை நோக்கி, பல வடிவங்களிலே போராடி இருக்கின்றார்கள் ஆனாலும் அதற்கான முற்றுப்புள்ளியை அடைய முடியாத ஒரு நிலையில் இன்று தமிழ் தேசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக வெடுக்கு நாறிமலை, குருந்தூர் மலை போன்ற இடங்களிலே விக்கிரகங்களை அழித்து அவற்றை உடைத்து சிதைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று சர்வதேச ரீதியில் சைவ சமயத்தில் மரபுரிமைகள், வழிபாடுகள் அந்நிய தேசங்களில் வளர்ந்து வருகின்ற போதும், இலங்கை  திருநாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சைவ சமயத்தின் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்படுவதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement