OTT -ல் வெளியாகும் ஸ்ருதி ஹாசன் படம் -என்ன படம் தெரியுமா ?

0
50

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர். மேலும் ஆங்கில இணைய தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் விதியுத்.தற்போது இவர் நடிகை ஸ்ருதியுடன் நடித்துள்ள திரைப்படம் தான் ‘யாரா’. Tigmanshu Dhulia என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் இருந்து Bhedi என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. நடிகை ஸ்ருதி இந்த பாடலை வெளியிட்டுள்ளார். இந்த படம் ஜூலை மாதம் 30ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று திரையுலகில் கால்பதித்த 11ம் ஆண்டை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .