நந்திக்கடலில் நிகழ்ந்துமுடிந்த துயரத்தை குறும்படம் மூலம் வெளிக்கொணரும் நமது ஈழத்துக்கலைஞர்கள்

550

சிறு எறும்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் இணைத்து படைத்திருக்கிறார்கள் “நந்தி குவேனி” என்ற குறும்படம்

குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்து 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக் கதையாக நந்திக்குவேனி உருவாகியிருக்கிறது.

விரைவில் வெளியாகவுள்ள இந்த நந்திக்குவேனி குறும்படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார் ஈழ வாணி கதைக்கு உயிரோட்டமளித்து நடித்திருக்கின்றார்கள் நவயுகா, விதுஷன் ,சுகிர்தன் , ஷாஷா ஷெரின் , திருமலை பிரணா , சயந்தி , அருண் ராஜ், யசோதரன்,அணு ,கிரி ரட்ணம் ,வாணி ஆகியோர்கள்.

ரெஜி செல்வராசா ஒளிப்பதிவு செய்துள்ள குறும்படத்துக்கு துணை இயக்குனராக கார்த்திக் சிவா பணியாற்றியுள்ளார். மேலும் ஜெயந்தன் விக்கி இசையமைத்துள்ளார்.

கலை இயக்குனர்-காலா மோகன், மேக்கப் கலைஞர்-அன்ரூ யூலியஸ் , நடனக்கலை- வாகீசன், ஆடை வடிவமைப்பு-சுவன்யா மற்றும் கிரி ரட்ணம், எடிட்டிங்- அலெஸ் கோபி, உதவி இயக்குனர்கள் – கிளிண்டன்,கருசன், அருள் சிந்து, சயந்தி,புகைப்படம் – ஒபேத் lkd, விளம்பர வடிவமைப்பு- சசி பாலசிங்கம்- புரோடக்சன் முகாமை- யாழ் தர்மினி பத்மநாதன், PRO-ஜான்சன், புரோடக்சன் மேலாளர்- விதுஷன் ஒருங்கிணைப்பு- கார்த்திக் சிவா என இலங்கையின் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து பணியாற்றியுள்ள இந்த படைப்பின் பட லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: