வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதே எங்களுடைய பிரதான இலக்கு! யாழில் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

257

இளைஞர் யுவதிகளின் பிரதானப் பிரச்சினை வேலையில்லை மற்றும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது. ஆகவே, எந்தவித கட்சி அனுமதியுமின்றி இன, மத ரீதியான எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவர்களுக்கான வேலைவாய்ப்பை கொடுப்பதே எங்களுடைய இலக்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் அமைச்சராக இருந்தபோது வடக்கிலே மின்சாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருந்தேன். தற்போதைய ஆட்சியில் இப்படியான ஒரு மின்சாரத் தடங்கல் இன்று ஏற்பட்டுள்ளது. எங்களுடைய அரசாங்க காலத்திலே இவ்வாறான ஒரு செயற்பாடு இல்லை.

வடக்கிலே வவுனியா தொடக்கம் சுன்னாகம் வரையான மின்சாரக் கட்டமைப்பிற்காக மிகச் சிறப்பாக நாங்கள் பணியாற்றி இருந்தோம்.

நாங்கள் அரசாங்கத்தில் இருக்கும்போது இங்கிருக்கக் கூடிய வி.ஜி.எம் அலுவலகத்திற்கு பணியாற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய இளைஞர் யுவதிகளுக்கு தான் வாய்ப்பை கொடுத்திருந்தோம். எனவே, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி, இங்கிருக்கக் கூடிய மக்களுக்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கின்றோம்.

நான் எரிசக்தி அமைச்சராக இருக்கும்போது நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்று அதன் ஊடாக இங்கிருக்கக் கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து 24 மணியாலங்களும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய எந்தவொரு மின்சாரத் தடங்களும் இல்லாத சேவையை வழங்கக் கூடிய ஒரு நிலையை ஆற்றியிருந்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.

நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, உலக வங்கியிடம் இருந்து நிதியைப் பெற்று யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

உலக வங்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நகரங்களான கொழும்பு, கண்டி, காலி நகரங்கள் இருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு புதிய நகரை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். தெருக்களுக்கான இணைப்பை உருவாக்குவது, போக்குவரத்தை சீராக ஏற்படுத்துவமே எங்களுடைய பிரிதான இலக்கு.

எங்களுடைய காலத்தில் கே.கே.எஸ் இல் இருந்து யாழ்ப்பாணம் வரையான தெருக்கள் புனரமைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டது. தற்பொழுது கலாசார மண்டபம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

கொழும்பு மாநகர சபையை விட பெரியளவான தோற்றத்தோடு யாழ்ப்பாண மாநகர சபை கட்டடம் நிறைவுக்கு வந்துள்ளது. இதனை உருவாக்கிய கட்டடக் கலை நிபுணர்கூட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவர்.
நீர்நிலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளோம். இப்போதுகூட ஒரு இடத்தில் மக்கள் தங்களுடைய நேரத்தை மகிழ்வாக இருக்கக்கூடிய இடங்களாக அவை உள்ளதை அவதானித்தோம்.

இங்கிருக்கக் கூடிய இளைஞர் யுவதிகளின் பிரதானப் பிரச்சினை வேலையில்லை மற்றும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது. வேலை என்றும் செல்லும் போது கட்சி சார்ந்த நியமனங்களே வழங்கப்படுகின்றது. எனவே அவற்றில் இருந்து விடுபட்டு பொருத்தமான இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவது தான் எங்களுடைய பிரதானமான இலக்காக உள்ளது.

ஏந்தவித கட்சி அனுமதியும் இல்லாமல் இன, மத ரீதியான எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவர்களுக்கான வேலைவாய்;ப்பை கொடுப்பதே எங்களுடைய இலக்கு.

இங்கையில் தற்போது மிகப்பெரிய பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளோம். வெளிநாட்டில் இருக்கக் கூடிய முக்கியமான பண பரிமாற்றம் தொடர்பில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். முக்கியமான பொருட்களுக்குக் கூட வெளிநாட்டு செலவாணியை செலவலிக்க முடியாத இக்கட்டான சூழலில் நாங்கள் இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருக்கின்றது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆரம்பத்தில் வாகன இறக்குமதியை நிறுத்தியிருந்தார்கள். அதன்பின் வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதியை நிறுத்தினார்கள். அதன்பின் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் என்பவற்றையும், விவசாயிகளுக்குத் தேவையான இரசாயண உரங்களையும் நிறுத்தினார்கள்.

இப்படி மக்களை ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றார்கள். இன்று நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதுதான் அவர்களுடைய பொருளாதார ரீதியான கொள்கை என்பதை தெரிந்து கொண்டிருக்கின்றோம்.

மேலும், நாங்கள் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அந்தவகையில், நாளை யாழ்ப்பாணத்திலும், நாளைமறுதினம் கிளிநொச்சியிலும் மக்கள் நலம்சார்ந்த, மக்களுடைய கருத்துக்களை முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: