• Mar 28 2024

நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு - கயேந்திரன் அதிரடி கருத்து! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 10:53 pm
image

Advertisement

நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 


இன்றைய தினம் நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு எதிராகவும் இனப்படுகொலை இராணுவத்திற்கெதிராகவும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,



யாழ்ப்பாணத்திலே நாவற்குழிப் பிரதேசமானது தமிழர்களுடைய பூர்வீகமான இடம். இந்தப் பிரதேசத்திலே 2009 ம் ஆண்டு இனப்படுகொலை யுத்தம் நிறைவுக்கு வந்த பிறகு ஆட்சிப்பீடமேறிய மகிந்த ராஜபக்சாவின் காலத்திலே யாழ்ப்பாணத்திலே இருந்த தமிழினத் துரோகி டக்லஸ் தேவானந்தாவின் துணையோடு இங்கு திட்டமிட்டதாரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது.  


அதன் பின்னர் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலமொன்றில் விகாரையொன்று கட்டப்பட்டது.  அத் தருணத்தில் சாவகச்சேரி நகரசபை இந் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்த பொழுது அதே காலப்பகுதியில் புத்த சாசன அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசா அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடக்கைகளை சட்டரீதியான நடவடிக்கைகளாக மாற்றினார்.


அதன் மூலமாக எமது தேசத்தில் திட்டமிட்ட விகாரை அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் ஆரம்பமானது.  இந்த செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றோம். இந்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. 


இன்றைய தினம் இவ் விகாரைக்கு இனப்படுகொலையாளியான சவேந்திர சில்வா வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.  திட்டமிட்ட.பௌத்தமயமாக்கலுக்கு இராணுவம் துணைபுரிந்து வருகின்றது.


இதேபோல் குருந்தூர் மலையில் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புக்கள் , தையிட்டியில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரைக்கு எதிராகவும் எமது போராட்டங்கள் தொடரும்.  தொல்பொருட் திணைக்களமானது தொல்பொருள் என்ற ரீதியிலே பௌத்தமயமாக்கலை முன்னெடுக்கின்றது. இதேபோல் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையிலும் பௌத்தமயமாக்கலுக்கான பெயர்ப்பலகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.  அதற்கெதிராக மிக விரைவில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் தமிழர் தாயகப் பரப்பில் எங்கெல்லாம் பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் நடைபெறுகின்றதோ அதற்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம் -என்றார்

நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு - கயேந்திரன் அதிரடி கருத்து SamugamMedia நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாவற்குழியில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு எதிராகவும் இனப்படுகொலை இராணுவத்திற்கெதிராகவும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,யாழ்ப்பாணத்திலே நாவற்குழிப் பிரதேசமானது தமிழர்களுடைய பூர்வீகமான இடம். இந்தப் பிரதேசத்திலே 2009 ம் ஆண்டு இனப்படுகொலை யுத்தம் நிறைவுக்கு வந்த பிறகு ஆட்சிப்பீடமேறிய மகிந்த ராஜபக்சாவின் காலத்திலே யாழ்ப்பாணத்திலே இருந்த தமிழினத் துரோகி டக்லஸ் தேவானந்தாவின் துணையோடு இங்கு திட்டமிட்டதாரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது.  அதன் பின்னர் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலமொன்றில் விகாரையொன்று கட்டப்பட்டது.  அத் தருணத்தில் சாவகச்சேரி நகரசபை இந் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்த பொழுது அதே காலப்பகுதியில் புத்த சாசன அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசா அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடக்கைகளை சட்டரீதியான நடவடிக்கைகளாக மாற்றினார்.அதன் மூலமாக எமது தேசத்தில் திட்டமிட்ட விகாரை அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் ஆரம்பமானது.  இந்த செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றோம். இந்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இன்றைய தினம் இவ் விகாரைக்கு இனப்படுகொலையாளியான சவேந்திர சில்வா வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.  திட்டமிட்ட.பௌத்தமயமாக்கலுக்கு இராணுவம் துணைபுரிந்து வருகின்றது.இதேபோல் குருந்தூர் மலையில் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புக்கள் , தையிட்டியில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரைக்கு எதிராகவும் எமது போராட்டங்கள் தொடரும்.  தொல்பொருட் திணைக்களமானது தொல்பொருள் என்ற ரீதியிலே பௌத்தமயமாக்கலை முன்னெடுக்கின்றது. இதேபோல் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையிலும் பௌத்தமயமாக்கலுக்கான பெயர்ப்பலகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.  அதற்கெதிராக மிக விரைவில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் தமிழர் தாயகப் பரப்பில் எங்கெல்லாம் பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் நடைபெறுகின்றதோ அதற்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம் -என்றார்

Advertisement

Advertisement

Advertisement