• Apr 25 2024

கொலை வழக்கிற்கு ஆஜரான ஆந்தை! அலறியடித்து வெளியில் ஓடிய மக்கள் - நீதிமன்றில் பரபரப்பு! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 4:20 pm
image

Advertisement

கொலை விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்றத்திற்குள் ஆந்தை ஒன்று நுழைந்தமையால்  அங்கிருந்த மக்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடியாமை பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்காவின் ப்ராக்பானில்(Brakpan) உள்ள நீதிமன்றத்தில் கொலை விசாரணை இடம்பெற்று கொண்டிருந்த வேளை, அழையாத விருந்தாளியாக நுழைந்த  ஆந்தை  அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. 

நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் காணப்பட்ட  துளை வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வித்தியாசமான பறவை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அது  ஆந்தையென இனம் காணப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் விசாரணையின் போது நுழைந்த ஆந்தையை கண்டு அங்கிருந்த மக்கள் கத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியேறியதால் சிறிது நேரத்திற்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் ப்ராக்பானில் உள்ள நீதிமன்ற அறையில் இருந்து ஆந்தையினை  மீட்டெடுக்க வேண்டுமென  ஆந்தை மீட்பு மையத்திற்கு ப்ராக்பன் SPCA வேண்டுகோள் விடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆந்தை மீட்புக் குழுவினர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் ஆந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கொலை வழக்கிற்கு ஆஜரான ஆந்தை அலறியடித்து வெளியில் ஓடிய மக்கள் - நீதிமன்றில் பரபரப்பு SamugamMedia கொலை விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்றத்திற்குள் ஆந்தை ஒன்று நுழைந்தமையால்  அங்கிருந்த மக்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடியாமை பரபரப்பை ஏற்படுத்தியது.தென்னாப்பிரிக்காவின் ப்ராக்பானில்(Brakpan) உள்ள நீதிமன்றத்தில் கொலை விசாரணை இடம்பெற்று கொண்டிருந்த வேளை, அழையாத விருந்தாளியாக நுழைந்த  ஆந்தை  அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் காணப்பட்ட  துளை வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வித்தியாசமான பறவை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அது  ஆந்தையென இனம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசாரணையின் போது நுழைந்த ஆந்தையை கண்டு அங்கிருந்த மக்கள் கத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியேறியதால் சிறிது நேரத்திற்கு பதற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் ப்ராக்பானில் உள்ள நீதிமன்ற அறையில் இருந்து ஆந்தையினை  மீட்டெடுக்க வேண்டுமென  ஆந்தை மீட்பு மையத்திற்கு ப்ராக்பன் SPCA வேண்டுகோள் விடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆந்தை மீட்புக் குழுவினர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் ஆந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement