• Apr 18 2024

பச்சிலைப்பள்ளியும் மருதங்கேணியும் பாவப்பட்ட பிரதேசம் - வடமாகாண சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.! samugammedia

Chithra / May 22nd 2023, 10:22 am
image

Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 2 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக நியமிக்குமாறு சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பளை வைத்தியசாலை முன்பாக திரண்ட மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் 

இதன் பின்னர் சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டடுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் கடிதங்கள் வழங்கியுள்ள போதும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இதுவரை நியமனக்கடிதங்களை வழங்கவில்லை என சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசமும் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பச்சிலைப்பள்ளியும் மருதங்கேணியும் பாவப்பட்ட பிரதேசம் என முரளிதரன் கவலை வெளியிட்டிருந்தார்.


பச்சிலைப்பள்ளியும் மருதங்கேணியும் பாவப்பட்ட பிரதேசம் - வடமாகாண சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. samugammedia பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 2 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக நியமிக்குமாறு சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.நேற்று பளை வைத்தியசாலை முன்பாக திரண்ட மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் இதன் பின்னர் சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.பிணையில் விடுவிக்கப்பட்டடுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் கடிதங்கள் வழங்கியுள்ள போதும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இதுவரை நியமனக்கடிதங்களை வழங்கவில்லை என சமூகசெயற்பாட்டளரான முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசமும் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.பச்சிலைப்பள்ளியும் மருதங்கேணியும் பாவப்பட்ட பிரதேசம் என முரளிதரன் கவலை வெளியிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement