• Apr 25 2024

மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க மாற்றி யோசித்த ஓவியர் - குவியும் பாராட்டு! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 8:07 pm
image

Advertisement

மேற்கு வங்கத்தில் ஓவியர் ஒருவர் இயற்கை மீதான விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக மரங்களில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.


இயற்கையின் பெரிய அரண் மரங்கள். மரங்கள் தான் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் ஆலைகள். மரங்கள் தான் நமக்கு மழை பொழிய வைக்கும் காரணிகள். நமக்காக நிழலையும் கனியையும் கொடுக்கும் மரங்கள் மீது நமக்கு மதிப்பே இல்லை.




நமது வசதிக்காக ஆயிரக் கணக்கான மரங்களை நாம் வெட்டி விடுகிறோம் தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதிலாக பல மரக்கன்றுகளை நாம் நட்டு பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழியாமல் இருக்கும். ஆனால் அதை நாம் செய்வதில்லை. 


இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்க்கார். மேற்குவங்க மாநிலம் பானிப்பூர் பகுதியில் ஹப்ராவை சேர்ந்தவர் தான் இந்த சஞ்சய் சர்க்கார்.


மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக இந்த யுக்தியை கெயில் எடுத்துள்ளார் சஞ்சய். இவர் மரங்களின் தண்டுகளில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரின் கை வண்ணத்தில் மரங்களில் கடவுள்கள், விலங்குகள், பறவைகள் என ஓவியம் தத்ரூபமாக மிளிர்கின்றன.

மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க மாற்றி யோசித்த ஓவியர் - குவியும் பாராட்டு SamugamMedia மேற்கு வங்கத்தில் ஓவியர் ஒருவர் இயற்கை மீதான விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக மரங்களில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.இயற்கையின் பெரிய அரண் மரங்கள். மரங்கள் தான் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும் ஆலைகள். மரங்கள் தான் நமக்கு மழை பொழிய வைக்கும் காரணிகள். நமக்காக நிழலையும் கனியையும் கொடுக்கும் மரங்கள் மீது நமக்கு மதிப்பே இல்லை.நமது வசதிக்காக ஆயிரக் கணக்கான மரங்களை நாம் வெட்டி விடுகிறோம் தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதிலாக பல மரக்கன்றுகளை நாம் நட்டு பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழியாமல் இருக்கும். ஆனால் அதை நாம் செய்வதில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்க்கார். மேற்குவங்க மாநிலம் பானிப்பூர் பகுதியில் ஹப்ராவை சேர்ந்தவர் தான் இந்த சஞ்சய் சர்க்கார்.மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக இந்த யுக்தியை கெயில் எடுத்துள்ளார் சஞ்சய். இவர் மரங்களின் தண்டுகளில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரின் கை வண்ணத்தில் மரங்களில் கடவுள்கள், விலங்குகள், பறவைகள் என ஓவியம் தத்ரூபமாக மிளிர்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement