மனிதர்களின் உயிர் பிரியாமல் தடுக்கும் அற்புத மருந்து யாழ்ப்பாணத்தில் உள்ளது!

200

பனங்கட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக உற்பத்திசெய்யப்படும் இயற்கை சார்ந்த ஓர் உன்னத மருந்துப்பொருளாகும்.

எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த பனங்கட்டியை பனங்கருப்பட்டி என்று தமிழகத்தில் சொல்கிறார்கள்.

கள் இறக்கும் தொழில்முறையில்தான் இந்த பனங்கட்டிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான இடங்களில் முன்னர் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த கைத்தொழில் தற்பொழுது மிகவும் சுருங்கியுள்ளது.

கள் இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் மண் பானை உள்ளே (முட்டி என்பார்கள்) வெள்ளைச் சுண்னாம்பை பூசி பாளையுடன் கட்டுவார்கள். அதனுள் ஒழுகும் கள்ளிலுள்ள அமிலங்கள் (மதுவம்) சுண்ணாம்பினால் செயலிழக்கச்செய்யப்படுகின்றன. இதனால் கருப்பனீர் எனப்படும் பதநீர் உருவாகிறது.

இந்த கருப்பனீரை பாத்திரமொன்றில் இட்டு காய்ச்சப்படும். இப்படியே தொடர்ச்சியாக காய்ச்சுகின்றபோது கெட்டியான களியாக மாறும். இந்த களியை பனை ஓலையில் செய்யப்பட்ட குட்டானில் இட்டபின்னர் காய்ந்து இறுகிவிடும்.

இந்த பனங்கட்டியில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது. இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.