• Apr 20 2024

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் பங்குனித் திங்கள் திருவிழா!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 11:19 am
image

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று(20) ஆரம்பமானது.

இன்று அதிகாலை அடியவர்கள் அம்மனுடைய தீர்த்தகேணியில் நீராடி  பன்றித்தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி    
சமைத்தும் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி இருந்தனர்.

அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வாழ்த்து, தோத்திரம் என ஆகமமுறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித்தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.


வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் பங்குனித் திங்கள் திருவிழாSamugamMedia வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று(20) ஆரம்பமானது.இன்று அதிகாலை அடியவர்கள் அம்மனுடைய தீர்த்தகேணியில் நீராடி  பன்றித்தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி    சமைத்தும் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி இருந்தனர்.அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வாழ்த்து, தோத்திரம் என ஆகமமுறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித்தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement