• Apr 18 2024

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Chithra / Feb 1st 2023, 9:11 am
image

Advertisement

தலங்கம பிரதேசத்தில் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொண்டு பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று சந்தேகநபர்கள் தலங்கம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் முறைப்பாடு செய்த இருவரின் தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தினால் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபரிடம் இருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபாய் பணம் மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்படும் 9 போலி டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலபே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை தலங்கம பிரதேசத்தில் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொண்டு பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று சந்தேகநபர்கள் தலங்கம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபரிடம் முறைப்பாடு செய்த இருவரின் தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.முறைப்பாடு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தினால் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபரிடம் இருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபாய் பணம் மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்படும் 9 போலி டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலபே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement