• Apr 20 2024

மலையகத்தில் நோயாளர்கள் அவதி! SamugamMedia

Tamil nila / Mar 15th 2023, 5:34 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட பணி புறக்கணிப்பு போராட்டத்தால் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் பணி  ஸ்தம்பிதம் அடைந்தது. பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) தலவாக்கலை பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து  வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த மக்கள் கடும் அசௌகரியங்களுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 


அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக மத்திய மாகாணம் உட்பட பல மாகாணங்களில் அரச வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள மருத்துவப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையக பிரதேசங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன. 



பல்வேறு நோய்களுக்கு மிக தூர பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற வந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். 


இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேவேளை தலவாக்கலை பிரதேச பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்தது.

மலையகத்தில் நோயாளர்கள் அவதி SamugamMedia நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட பணி புறக்கணிப்பு போராட்டத்தால் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் பணி  ஸ்தம்பிதம் அடைந்தது. பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) தலவாக்கலை பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து  வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த மக்கள் கடும் அசௌகரியங்களுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக மத்திய மாகாணம் உட்பட பல மாகாணங்களில் அரச வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள மருத்துவப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையக பிரதேசங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன. பல்வேறு நோய்களுக்கு மிக தூர பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற வந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேவேளை தலவாக்கலை பிரதேச பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement